close
Choose your channels

மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: மகள் செயலியில் மெசேஜ்!

Monday, November 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாக தனது மகளின் செயலில் குரல் மூலம் மெசேஜ் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் நேற்று இரவு ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. வீடு திரும்பிய ரஜினிகாந்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்ததாகவும், அதேபோல் ரஜினி வீட்டின் வாசலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தான் நலமுடன் இருப்பதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் செயலி மூலம் ரஜினிகாந்த் ஆடியோவை பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment