ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்
- IndiaGlitz, [Sunday,October 31 2021]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அவருக்கு ரத்த திசுநாளங்களில் இருந்த பிரச்சினையால் சிறிய அறுவை சிகிச்சை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் என்பதும் மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மாலை அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாளை காலை ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது குணமாகி விட்டதாகவும் இதனையடுத்து அவர் நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.