ரஜினியின் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. ஆனாலும் ஒரு அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் முதல் ஷெட்யூல் வெறும் 4 நாட்கள் மட்டும் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று முதல் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நேற்று ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வெறும் 4 நாட்கள் மட்டுமே நடக்கும் என்றும் அதன் பின்னர் ஜூலை 10ஆம் தேதி முதல் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் இதற்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்குதான் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் என்பதை அதிகாரப்பூர்வமாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ள நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்குவதால் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.