'மெர்க்குரி' படக்குழுவினர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் பாராட்டு

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

ஒன்றரை மாத வேலைநிறுத்தத்திற்கு பின்னர் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி. வசனமே இல்லாமல் மெளனமொழி த்ரில் திரைப்படமான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பிரபுதேவா, ப்ரியா பவானிசங்கரின் நடிப்புக்கு நல்ல விமர்சனம் கிடைத்தது

இந்த நிலையில் 'மெர்க்குரி' படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினர்களை நேரில் அழைத்து பாராட்டினார். நேற்று ரஜினியின் வீட்டுக்கு அவரது அழைப்பின்பேரில் சென்ற கார்த்திக் சுப்புராஜ், இந்துஜா உள்பட அனைவரையும் நேரில் ரஜினி பாராட்டியது படக்குழுவினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தலைவர் மெர்க்குரி படத்தை பார்த்து பாராட்டியது பெரும் மகிழ்ச்சியை தந்தது. எங்கள் டீமில் உள்ள ஒவ்வொருவரையும் பாராட்டிய சூப்பர் ஸ்டார், 'சூப்பர் படம்' என்று கூறியதை விட பெரிய விஷயம் எங்களுக்கு வேறு இல்லை. நன்றி தலைவா' என்று தெரிவித்துள்ளார். 

மேலும் 'பிரபுதேவா கலக்கிட்டாரு, கேமிரா, மியூசிக், ஸ்டண்ட் எல்லாமே எக்ஸலண்ட், மொத்தத்தில் சூப்பர் படம் என்று ரஜினிகாந்த் கூறி இந்த படத்தை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய படங்களில் ரிலீஸ், கடந்த வெள்ளி முதல் தொடங்கியது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மகேஷ்பாபுவின் முத்த புகைப்படம்

தெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்த 'பாரத் அனே நேனு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த படமும் மகேஷ்பாபுவின்

நட்சத்திர ஓட்டலில் நடிகர்கள் பேசியது என்ன?

தயாரிப்பாளர்களின் செலவுகளை குறைக்க நடிகர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூட்டம் ஒன்று நடந்தது.

'தளபதி 62' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? புதிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில்

தேர்தலில் தோற்கவும் தயார்: கமல்ஹாசன்

நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று சென்னை தி.நகரில் 'தமிழ்நாட்டிற்கான தலைமைத்துவம், அடுத்து சுற்று' என்ற தலைப்பில் பேசினார்.