close
Choose your channels

தல அஜித்தின் சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி

Thursday, April 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தல அஜித்தின் விவேகம் சாதனையை ரஜினியின் 'காலா' திரைப்படம் முறியடித்த தகவல் வெளிவந்துள்ளது.

ரஜினியின் காலா திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த டீசருக்கு தற்போது 23,755,979 பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். இது அஜித்தின் 'விவேகம்' படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையான 23,023,357 என்பதை முறியடித்துள்ளது. மேலும் 'காலா' படத்தின் லைக்ஸ்களும் 5 லட்சத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்துவிட்ட போதிலும் திட்டமிட்டபடி 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தனுஷ் விரைவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 'காலா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த தனுஷூக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் நன்றி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment