மந்திரங்களை கட் செய்த ரஜினிகாந்த்.. 'பாபா' ரீரிலீஸ் குறித்து ரசிகர்கள் ரியாக்சன் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் 20 ஆண்டுகள் கழித்து மறுபடியும் எடிட் செய்யப்பட்டு இந்த படம் ரிலீசாகி உள்ளது. அடாத மழையிலும் ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளில் ’பாபா’ படத்தை பார்க்க ஆர்வத்துடன் குவிந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ’பாபா’ திரைப்படம் வெளியாகும்போது இந்த படத்தில் ரஜினிக்கு ஏழு வரங்கள் கொடுக்கப்பட்டது போல் இருக்கும். ஆனால் தற்போது ரிலீஸ் ஆன ’பாபா’ படத்தில் ஐந்து வரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வரங்கள் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் ’பாபா’ படம் பார்த்த ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நீலாம்பரியாக ரம்யாகிருஷ்ணன் வரும் மந்திரமும் ஜப்பானிய பெண் ஒருவருக்கு உதவும் மந்திரமும் நீக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவருகிறது.
அதுமட்டுமின்றி பாடல்கள் உள்பட பல காட்சிகள் ஆங்காங்கே எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கிளைமாக்ஸ் காட்சி மொத்தமாக மாற்றப்பட்டு பாபாவுக்கு மீண்டும் மறு ஜென்மம் வழங்கும் போல் அமைக்கப்பட்டு உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் ’பாபா’ பார்த்த படத்தை பல ரசிகர்கள் புதிய படத்தை பார்ப்பது போல் இருப்பதாக கூறினாலும், எடிட் செய்யாமல் மொத்த படத்தை வெளியிட்டிருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கூறுகின்றனர்.
In the history of world cinema only actor @rajinikanth can turn the normal day and theatre into a festival vibe even by his 20+yrs old movie re-release #BaBa ????#BabaReturns #BaBaReRelease pic.twitter.com/c6CaKPcEAL
— THALAIVAR 169 (@rajni_mohan_rfc) December 10, 2022
Ayiram Athisayam Vibes On @UmaaRajendra
— RangarajinismBaba (@Rangarajinism97) December 11, 2022
??????❤️#BabaReturns #BaBaReRelease pic.twitter.com/6GTcFUnXrg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments