'விடுதலை' படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்னது என்ன? சூரிக்கு இப்படி ஒரு வாழ்த்தா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தை பார்த்து ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ‘விடுதலை’ படம் பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத ஒரு கதைக்களம். இது ஒரு திரை காவியம். சூரியின் நடிப்பு பிரம்மிப்பு, இளையராஜா இசையில் என்றும் ராஜா, வெற்றிமாறன் தமிழ் திரை உலகின் பெருமை, தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதை அடுத்து படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
— Rajinikanth (@rajinikanth) April 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com