முடிச்சிடலாம்.. சூப்பர் ஸ்டாரின் அட்டகாசமான சிரிப்புடன் 'தலைவர் 171' டைட்டில் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,April 22 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்றும் அது மட்டுமின்றி சமீபத்தில் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சற்று முன் அந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’.

இந்த படத்தின் டைட்டில் ’கூலி’ என்று வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மூன்று நிமிடத்திற்கும் மேலான வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

ஏராளமாக தங்கத்தை கடத்தி வைத்திருக்கும் ஒரு வில்லன் கும்பல் இருக்கும் இடத்திற்கு நுழையும் ரஜினிகாந்த் அங்கு உள்ளவர்களை அடித்து நொறுக்கி விட்டு அட்டகாசமாக பேசும் வசனம் இந்த வீடியோவில் உள்ளது. மேலும் கமல், ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரியையும் ரஜினிகாந்த் வசனமாக பேசியுள்ள காட்சி உள்ளது. அந்த வசனம் இதுதான்..

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே
சோறுண்டு சுகமுண்டு மதுவுண்டு மாதுவுண்டு
மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு.. போடா..

இந்த வீடியோ அசத்தலாக இருப்பதை அடுத்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது என்பதும் பிற்படுத்தப்பட்டது. வீடியோவின் முடிவில் சூப்பர் ஸ்டார் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் ‘முடிச்சிடலாம்’ என்று கூறும் ஸ்டைலே அழகுதான்..