பேட்டி எடுக்க வந்த லதாவை திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டார்.. ரஜினியின் அழகான காதல் கதை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் புகழின் உச்சத்தில் இருக்கும்போது தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை திருமணம் செய்து கொண்ட காதல் கதை குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமணநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது காதல் கதை குறித்து தற்போது பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நிலையில் எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் படித்து வந்த லதா, ரஜினியை பேட்டி எடுப்பதற்காக அணுக்கினார். தனது கல்லூரியில் இருந்து உங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்ற பணி கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியதும் உடனடியாக அந்த பேட்டிக்கு ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டார்.
அந்த பேட்டியின் போது திடீரென ரஜினிகாந்த் லதாவை பார்த்து ’என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்டதாகவும் இதனை அடுத்து எனது பெற்றோரிடம் கேட்டு சொல்கிறேன் என லதா கூறியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து ரஜினிகாந்தின் குழந்தை பருவம், இளமை பருவம் குறித்து லதா முழுமையாக தெரிந்து கொண்டதாகவும் இளம் வயதிலேயே அம்மாவை இழந்த ரஜினிக்கு தாய்மை அன்பு மற்றும் அரவணைப்பு தேவை என்பதை உணர்ந்து கொண்டதால் லதா அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணன் அவர்களை லதாவின் பெற்றோர் சந்தித்து இந்த திருமணத்தை முடிவு செய்தனர். 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ரஜினி - லதா திருமணம் திருப்பதி கோவிலில் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரஜினியிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதும், குறிப்பாக ரஜினி ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு லதா தான் காரணம் என்றும், ஒரு அன்பான மனைவி இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு என பலமுறை ரஜினி பேட்டிகளிலும் மேடைகளிலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இரண்டு மகள்களுடன் ரஜினி - லதா தம்பதியினரின் இல்வாழ்க்கை 40 வருடங்களுக்கு மேலாக சந்தோசமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments