ரஜினியின் பெயர், புகைப்படம், குரல்: வழக்கறிஞரின் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை வணிக ரீதியிலான நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கறிஞர் இளம்பாரதி என்பவர் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை அவரது ஒப்புதல் இல்லாமல் பலர் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அதனால் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் ரஜினியின் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை அவரது அனுமதி இன்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய இருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ’லால் சலாம்’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com