சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'லால்சலாம்' ரிலீஸ் தேதி.. மாஸ் ஆக வருகிறார் மொய்தீன்பாய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லால்சலாம்’ திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்பின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அது குறித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால்சலாம்’. இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் சில தொழில்நுட்ப பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. எனவே பொங்கல் திருநாளில் லைக்கா தயாரித்த இன்னொரு திரைப்படமான ’மிஷன் சாப்டர் ஒன்’ என்ற படம் வெளியாகிறது.
இந்த நிலையில் தற்போது ‘லால்சலாம்’ படத்தின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் பிப்ரவரி 9ஆம் தேதி தான் எங்களுக்கு பொங்கல் திருநாள் என்று பதிவு செய்து வருகின்றனர். ’நம்ம தேர் திருவிழாவுக்கு அலப்பறை கிளப்ப நேரம் வந்துருச்சு ‘லால்சலாம்’ பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜீவிதா, லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா மற்றும் சிறப்பு தோற்றத்தில் கபில்தேவ் நடித்துள்ளனர். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், ப்ரவீண் பாஸ்கர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது,.
Namma THER THIRUVIZHA'ku Alappara kelappa neram vandhachu! 🤩 LAL SALAAM 🫡 hits the big screen 📽️✨ on February 9th 2024! Save the date! 🗓️#LalSalaam 🫡 @rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/CbYHQ4J0sq
— Lyca Productions (@LycaProductions) January 9, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com