சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்': படப்பிடிப்புக்கு முன்னரே அப்டேட் கொடுக்கும் நெல்சன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பிற்கு முன்னரே ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க நெல்சன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட ஒருசிலர் கலந்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.