close
Choose your channels

உலகின் கவனத்தை ஒரே நாளில் திருப்பும் கபாலி-பாகுபலி

Saturday, July 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் சென்சார் அனேகமாக வரும் திங்கட்கிழமை இருக்கலாம் என்றும் அதன்பின்னர் ஜூலை 22 என்று திட்டமிடப்பட்டுள்ள ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸை தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மற்றும் ஒட்டுமொத்த வசூல் பல புதிய சாதனைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் வசூலில் அதிர வைத்த எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி' திரைப்படமும் அதே ஜூலை 22ஆம் தேதி சுமார் 5000 திரையரங்குகளில் சீனாவில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ரூ.600 கோடிக்கும் மேலாக இந்த படம் வசூல் செய்துவிட்ட நிலையில் சீன வசூலை சேர்த்தால் ரூ.1000 கோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் சீன வசூலை உலகமே உன்னிப்பாக கவனிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி ஆயிரக்கணக்கான கோடிகளை வசூல் செய்த நிலையில் தற்போது இந்திய திரைப்படங்கள் குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வசூல் செய்வது பெருமைக்குரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment