சித் ஸ்ரீராம் பாடிய 'சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே'.. 'லால் சலாம்' படத்தின் சூப்பர் பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்ற நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார் என்பதும் ’ஏ புள்’ என்று தொடங்கும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிராமத்து மெலடி பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜீவிதா, லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா மற்றும் சிறப்பு தோற்றத்தில் கபில்தேவ் நடித்துள்ளனர். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், ப்ரவீண் பாஸ்கர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், சிறப்பு தோற்றம் என்றாலும் டீசரில் உள்ள ரஜினியின் காட்சிகள் மாஸ் ஆக இருந்ததால் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com