'காலா' அமெரிக்க ரிலீஸ் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,May 08 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் பாடல்கள் நாளை சென்னையில் வெளியாகவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை அமெரிக்காவில் எம்.எம்.மீடியா நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ரஜினியின் சந்திரமுகி, சிவாஜி, அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் கத்தி உள்பட பல திரைப்படங்களை பிரமாண்டமாக வெளியிட்டுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அமெரிக்காவில் உள்ள பிரமாண்டமான திரையரங்குகளில் 'காலா' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், ஜூன் 6ஆம் தேதி இந்த படத்தின் பிரிமியர் காட்சிகளும், ஜூன் 7ஆம் தேதி இந்த படத்தின் ரெகுலர் காட்சிகளும் திரையிடப்படும் என எம்.எம். மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

More News

கஸ்தூரிராஜாவின் திகில் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்

கிராமப்புறத்து திரைப்படங்களை அதிகம் இயக்கிய இயக்குனர் கஸ்தூரிராஜா முதல்முறையாக திகில் படம் ஒன்றை இயக்கவுள்ளார். பாண்டிமுனி' என்ற டைட்டிலில் உருவாகும்

காஷ்மீரில் கல்வீச்சு சம்பவம்: சென்னை வாலிபர் பரிதாப மரணம்

சமீபத்தில் தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி நேற்று மாலை பர்காம் மாவட்டத்தின் வழியே காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்த படம் பார்க்க டிஷ்யூ பேப்பர் தேவையில்லை: ஜே சதீஷ்குமாரின் டுவீட்

கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த ஜே சதீஷ்குமார், அவர் தயாரித்துள்ள 'அண்டாவ காணோம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

சமூக அக்கறையுடன் இளைஞர்களுக்கு தேவையான படம்: இருட்டு அறையில் முரட்டு குத்து குறித்து பிரபல தயாரிப்பாளர்

சமீபத்தில் வெளிவந்த கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'; திரைப்படம் நல்ல வசூலை பெற்று வந்தாலும் இந்த படத்திற்கு கண்டனங்கள் குவிந்துள்ளது.

டிஎஸ்பி விஸ்ணுப்ரியா வழக்கு கைவிடப்பட்டதா? சிபிஐ அதிகாரிகள் கூறுவது என்ன?

கடந்த 2015ஆம் ஆண்டு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா, தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்