உன்னையும் மண்ணையும் வென்று வா நீ! ரஜினியின் 'காலா' டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல், நானா படேகரின் வில்லத்தனத்துடன் கூடிய இந்த டீசரின் பின்னணி இசை 'கபாலி' படத்திற்கு இணையாக அட்டகாசமாக உள்ளது.

'காலா' என்ன பேருய்யா இது' என்று நானாபடேகரின் கேள்விக்கு, 'காலா'ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்' என்ற பதில் பின்னணியில் ஒலிக்கின்றது.

இந்த தேசம் சுத்தமா, புனிதமா மாறனும்ன்னு விரும்புறேன்' என்ற நானா படேகரின் வசனமும், ரஜினியின் 'கருப்பு உழைப்போட வண்ணம், என் இடத்துல வந்து பாரு, அழுக்கு அத்தனையும் உன்னை மாதிரி இருக்கும்' என்ற  ரஜினியின் வசனமும் ஆடியன்ஸ்களுக்கு கிடைத்த விருந்து. மேலும் 'ஒத்தையல நிக்கிறேன், தில் இருந்தா மொத்தமா வாங்க, என்று சொடக்கு போட்டு ரஜினி கூப்பிடும் ஸ்டைல், அவரது ரசிகர்களுக்கு கிடைத்த போனஸ்

சந்தோஷ் நாராயணன் இசையில் யோகி பி குரலில், 'வா உன்னையும் மண்ணையும் வென்று வா நீ... ராதவோர் தேவையைக் கொண்டு வா நீ... ஆயிரம் ஆண்டுகள் போதுமேயுன்...ராகமே மாறுவாய் சீறுவாய்' என்ற பாடல் ரசிகர்களை விசிலடிக்க செய்யும். இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தை நீங்க பார்த்தது இல்லைல்ல' என்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து ரஜினி வசனம் பேசும் ஸ்டைல் நிச்சயமாக வேறு யாருக்கும் வராது.

கச்சிதமான எடிட்டிங், ஆர்ப்பாட்டமான ஒளிப்பதிவு, அதிரடியான பின்னணி இசை , சோஷலிச கருத்துக்களுடன் கூடிய  வசனங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினியின் ஸ்டைல் ஆகியவை அடங்கிய இந்த 'காலா' டீசர் , படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டினாலும் ஏப்ரல் 27 வரை காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

3 வித்தியாசமான கோணத்தில் இலங்கை போர் பற்றிய தமிழ்ப்படம்

இலங்கையில் ஒரு பகுதியான 'யாழ்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இலங்கையில் போர் நடக்கும் போது ஆறு முக்கிய கதாபாத்திரங்களுக்குள் "என்ன நடக்கின்றது என்பதே இந்த படத்தின் கதை.

தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான பத்து வயது சிறுவன்

தாய் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் அவருடைய 10 வயது மகன் கொடூரமாக கள்ளக்காதலனால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் சென்னை நகரையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை: விவசாயிகளின் கண்களை போல் சிவந்த ஏரி

தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியது. இதனால் பொதுமக்கள் திண்டாடினாலும், தக்காளி விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர்.

'விஸ்வரூபம் 2' டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வேறு படங்கள் வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

இரண்டாம் பாக வெற்றி பயணத்தில் இன்றுமுதல் சந்தானம்

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம் 'தில்லுக்கு துட்டு' இந்த படம் ஹிட்டாகிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.