'காலா' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தனுஷ் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது டுவிட்டரில் பதிவு செய்தார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தனுஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இதன்படி 'காலா' படத்தின் டீசர் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் 'இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற இந்த படத்தின் வசனத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

'காலா' டீசர் வெளியாக இன்னும் நான்கு தினங்களே இருப்பதால் ரஜினி ரசிகர்கள் படு உற்சாகத்துடன் டீசரை வரவேற்க இப்போதே தயாராகிவிட்டனர்.

More News

த்ரிஷாவிடம் குத்து வாங்கிய அதிர்ஷ்டகாரர்

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா. இவருடன் நடித்த நடிகைகள் பலர் அக்கா, அம்மா வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கும் நிலையில்

ஜாக்குலினை அடுத்து சினிமாவில் அறிமுகமாகும் ரக்சன்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான ஜாக்குலின், ரக்சன் ஏற்கனவே பிரபலம் அடைந்த நிலையில், ஜாக்குலின், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்துவருகிறார்

ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய லேட்டஸ்ட் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்று நேற்று வெளியான செய்தி ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

மோடி மோசடியால் விராத் கோஹ்லி பதவிக்கு ஆபத்தா?

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அந்த வங்கியின் நிலை ஆட்டம் கண்டுள்ளது

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பட இயக்குனர்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில்' படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.