'காலா' ரிலீஸ் தேதி: தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது

தற்போது ஸ்டிரைக் முடிந்துவிட்டாலும், 'காலா'வுக்கு முன் சென்சார் ஆன படங்கள் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை இருந்ததால் காலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்படும் என்றும், புதிய ரிலீஸ் தேதியை தனுஷ் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு தனுஷ் தனது சமூகவலைத்தளத்தில் 'காலா' ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி இந்த படம் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.