ஒருவழியா 'ஜெயிலர்' அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்.. அனிருத் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அனிருத் வீடியோவையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
First Single ready. Announcement Promo Ready. Promo ku Promo-um ready 😉
— Sun Pictures (@sunpictures) July 2, 2023
⁰#JailerFirstSingle Update Tomorrow at 6pm.⁰@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/EVaLlrp4XK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com