ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த விக்னேஷ் சிவன்.. செம்ம வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,August 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விறுவிறுப்பாக பார்த்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் லிரிக் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார் என்பதும் விஷால் மிஷ்ரா இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ’ஜெயிலர்’ படத்தில் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செம்ம மெலோடியாக கம்போஸ் செய்யப்பட்டுள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தனது மகனை எண்ணி பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

என் முகம் கொண்ட என்னுயிரே
என் பெயருக்காக பிறந்தவனே
என் குணம் கொண்ட என் உலகே
எவனையும் தாண்டி சிறந்தவனே

எனக்கு பின் என்னை தொடர்பவன் நீயே
நான் நம்பத்தகுந்த நல்லவன் நீயே
புதல்வா புதல்வா வா புதல்வா புதல்வா வா

More News

செம ஸ்டைலாக மாறிய சிம்பு.. 'எஸ்டிஆர் 48' படம் வேற லெவல் தான்..!

நடிகர் சிம்பு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தயாராக அவர் வெளிநாடு சென்றார் என்பதும் உடலை ஃபிட்டாகி திரும்பினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

விளையாட வேண்டிய வயதில்… கோடிக்கணக்கில் சம்பாதித்து ஓய்வுபெற்ற சிறுமி!!

என்னதான் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பக் காலக்கட்டமாக இருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது என்பதையெல்லாம் நம்மால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

முதல்முறையாக மிரட்டல் கேரக்டரில் பிக்பாஸ் ரக்சிதா .. வைரல் வீடியோ..!

பிக்பாஸ் ரக்சிதா முதல் முறையாக மிரட்டலான ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.  

கவின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா? வைரல் புகைப்படம்..!

நடிகர் கவின் விரைவில் தனது காதலி மோனிகா என்பவரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில்  மோனிகா, லாஸ்லியாவின் தோழி என்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஜெயிலர்' படத்தில் மோகன்லால் கேரக்டர் என்ன? அவரே அளித்த தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில்