விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த 'ஜெயிலர்' நடிகர்.. அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 21 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் சமீபத்தில் இணைந்த பிரபல நடிகர் ஒருவர் விஷால் நடித்து வரும் அடுத்த படத்திலும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் நடித்த ’லத்தி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் ஏற்கனவே எஸ்ஜே சூர்யா, ரிதுவர்மா உள்ளிட்டோர் நடித்துவரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக அசத்திய சுனில் அதன் பிறகு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்த தற்போது விஷாலின் ’மார்க் ஆண்டனி’ படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.