'ஐயாம் சாரி, எனக்கு உருது தெரியாது'! ரஜினியை கலாய்த்த நயன்தாரா
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’தர்பார் திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்களின் சமூகத்தில் இந்த படத்தின் 30 வினாடிகள் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ரஜினிகாந்த்தை நயன்தாரா கலாய்ப்பது போன்ற காமெடி காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியின் காமெடி நடிப்பும் நயனின் கலாய்ப்பு நடிப்பும் ரசிக்கும் வகையில் இருப்பதால் ரஜினி மட்டும் நயன்தாரா ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் இந்த ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
Here you go guys, a sneak peek of the charming and romantic side of Thalaivar in #Darbar #Darbarpongal @rajinikanth #Nayanthara @SunielVShetty @LycaProductions @anirudhofficial @santoshsivan @iYogiBabu @i_nivethathomas @prateikbabbar https://t.co/NpwVnE7FUV
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com