ஐபிஎல் போட்டியை பார்க்க  வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே வீரர்களின் அபார பந்துவீச்சால் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இந்த நிலையில் இன்றைய போட்டியை நேரடியாக கண்டு ரசிக்க திரையுலகினர் உள்பட பல பிரபலங்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ஐபிஎல் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வருகை தந்தார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் 'தலைவர் தலைவர்' என கோஷமிட்டதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.