'இது வேத வாக்கு': சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் டிரைலர் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்த டிரைலரில் ’நீ யார் என்பது நீ சேர்த்து வைத்த சொத்துக்கள் மற்றும் உன் மேல் வைத்திருக்கும் பயத்தில் இல்லை. நீ செய்த செயல்களிலும் நீ பேசுற பேச்சிலும் இருக்கிறது, இது வேத வாக்கு’ என்று ரஜினியின் குரலுடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரக்கோட்டை சுற்றியுள்ள எல்லா கிராமத்திற்கும் அவர்தான் பிரசிடெண்ட் என்ற வசனத்தில் இருந்து இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஊராட்சி மன்ற தலைவர் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் என்பதும் தெரியவருகிறது.
கடவுள் கொடுக்கும் எல்லா செல்வத்தையும் என் தங்கச்சி கொடுக்க சொல்லுங்க என்று ரஜினிகாந்த் கூறும் வசனத்தில் இருந்து தன் தங்கை மீது மிகப்பெரிய அளவில் ரஜினிகாந்த் பாசம் வைத்திருக்கும் கதையம்சம் கொண்ட படம் என்று தெரியவருகிறது.
மேலும் எதிர்பார்த்தது போலவே இந்த ட்ரெய்லரில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மற்றும் மீனாவின் காட்சிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரகாஷ்ராஜின் காட்சிகளும் இந்த டிரைலரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாழ்க்கையில் எத்தனையோ எதிரிகளை நான் பார்த்திருக்கிறேன், முதல் முறையாக என்னை கண்ணீர் சிந்த வைத்த எதிரி நீ, உன்னை அழிப்பது என் கடமை அல்ல, உரிமை என்ற வில்லனின் வசனம், நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள பிள்ளைக்கு அந்த சாமியே இறங்கி வந்து அவளுக்கு துணையாக நிற்கும் என்கிற ரஜினியின் வசனமும் சிறுத்தை சிவாவின் அக்மார்க் வசனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், குடும்ப சென்டிமென்ட் காட்சிகள், சூரியுடன் நகைச்சுவை காட்சிகள், வில்லனின் அட்டகாசமான காட்சிகள் என இந்த படத்தின் ஒட்டுமொத்த அம்சங்களும் நிறைந்து இருப்பதால் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments