'இது வேத வாக்கு': சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' டிரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் டிரைலர் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த டிரைலரில் ’நீ யார் என்பது நீ சேர்த்து வைத்த சொத்துக்கள் மற்றும் உன் மேல் வைத்திருக்கும் பயத்தில் இல்லை. நீ செய்த செயல்களிலும் நீ பேசுற பேச்சிலும் இருக்கிறது, இது வேத வாக்கு’ என்று ரஜினியின் குரலுடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரக்கோட்டை சுற்றியுள்ள எல்லா கிராமத்திற்கும் அவர்தான் பிரசிடெண்ட் என்ற வசனத்தில் இருந்து இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஊராட்சி மன்ற தலைவர் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் என்பதும் தெரியவருகிறது.

கடவுள் கொடுக்கும் எல்லா செல்வத்தையும் என் தங்கச்சி கொடுக்க சொல்லுங்க என்று ரஜினிகாந்த் கூறும் வசனத்தில் இருந்து தன் தங்கை மீது மிகப்பெரிய அளவில் ரஜினிகாந்த் பாசம் வைத்திருக்கும் கதையம்சம் கொண்ட படம் என்று தெரியவருகிறது.

மேலும் எதிர்பார்த்தது போலவே இந்த ட்ரெய்லரில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மற்றும் மீனாவின் காட்சிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரகாஷ்ராஜின் காட்சிகளும் இந்த டிரைலரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாழ்க்கையில் எத்தனையோ எதிரிகளை நான் பார்த்திருக்கிறேன், முதல் முறையாக என்னை கண்ணீர் சிந்த வைத்த எதிரி நீ, உன்னை அழிப்பது என் கடமை அல்ல, உரிமை என்ற வில்லனின் வசனம், நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள பிள்ளைக்கு அந்த சாமியே இறங்கி வந்து அவளுக்கு துணையாக நிற்கும் என்கிற ரஜினியின் வசனமும் சிறுத்தை சிவாவின் அக்மார்க் வசனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், குடும்ப சென்டிமென்ட் காட்சிகள், சூரியுடன் நகைச்சுவை காட்சிகள், வில்லனின் அட்டகாசமான காட்சிகள் என இந்த படத்தின் ஒட்டுமொத்த அம்சங்களும் நிறைந்து இருப்பதால் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.

More News

பலருக்கு விஷம் கொடுத்தேன்…. டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர் 100க்கும்

சைட்டில் பெண்களே இல்லை? டேட்டிங் ஆப் மீது வழக்குத் தொடுத்த பலே இளைஞர்!

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பயன்படுத்தும் டேட்டிங் ஆப்பில் பெண்களே இல்லை, தரவுகளை

இந்த அரசாங்கம் பதில் சொல்லியே ஆகணும்: ஜிவி பிரகாஷின் 'ஜெயில்' டீசர்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஜெயில்' திரைப்படம் நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை சமீபத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்

பாவனி, மதுமிதாவுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை!

பாவனி மற்றும் மதுமிதா ஆகிய இருவருக்கும் பிக்பாஸ் நெருப்பும் ஓட்டும் தண்டனையை கொடுத்த காட்சி இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் உள்ளன. 

டி20 போட்டியில் டீ காக் செய்த செயல்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

நேற்று துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டியில்