750 தயாரிப்பாளருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் உதவி: நன்றி கூறிய பிரபல தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட திரையுலகினர்கள் பலருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிதியுதவி, பொருளுதவி செய்து வரும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி செய்துள்ளார். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
கொடூரமான கொரோனா கிருமிகளின் தாக்குதல்கள் காரணமாக நம் தயாரிப்பாளர்களில் நூற்றுக்கணக்கானோர் பல இன்னல்களுக்கு ஆளாகி, பொருளாதார சிரமத்தில் வீட்டிற்குள்ளேயே வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நேரத்தில் தயாரிப்பாளர்களில் சிலர் நல்ல மனதுடன் அரிசி மூட்டைகளும், பணமும் கொடுத்து உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி !
ஒவ்வொரு உறுப்பினர்களின் குடும்பத்திற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவைகள் அதிகம். ஆகவே மேலும் தயாரிப்பாளர்களுக்கு உதவி வேண்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். பல பேரை வாழ வைத்தவர்கள், கொடுத்து பழகியவர்கள் நம் தயாரிப்பாளர்கள். அவர்கள் இன்று பொருளாதார சிரமத்தில் சிக்கி அவதிபடுகின்றனர். யாரிடமும் உதவி கேட்டு பழகாத நம் தயாரிப்பாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் நல்ல முறையில் செய்ய வேண்டும் என கேட்டேன். பல பேருக்கு உதவி கரம் நீட்டிய சூப்பர் ஸ்டார் அவர்கள் நம் தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு உதவி செய்வதாக உறுதி கொடுத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் அவர்களின் நல்ல மனதிற்கு நன்றி தெரிவிப்போம். அநேகமாக 3-5-2020 அன்று நம் உறுப்பினர்களுக்கு நேரமும் இடமும் அறிவிக்கப்படும்.
நாட்டிலுள்ள நெருக்கடி நிலை கருதி, தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் அனைவரும் ஒரே இடத்தில் கூட்டமாக சேராமல் தி.நகர், சாலிகிராமம், வளசரவாக்கம் ஆகிய மூன்று இடங்களில் வைத்து விநியோகம் செய்யப்படும். இடமும், நேரமும் பிறகு அறிவிக்கப்படும். உண்மையிலேயே பொருளாதார சிரமத்தில் உள்ள தயாரிப்பாளர்கள் சூப்பர் ஸ்டார் அவர்கள் தயாள குணத்துடன் செய்யும் உதவியை பெற்ற மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன். சில நாட்களுக்கு வீட்டுக்குள்ளே இருப்போம். கொடிய கொரோனாவை நாட்டை விட்டு விரட்டுவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments