சும்மா கெத்தா சொல்வோம்: சூப்பர் ஸ்டார் ரஜினி ஆந்த்தம் பாடிய சிம்பு
- IndiaGlitz, [Saturday,July 04 2020]
நடிகர் சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆந்த்தம் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆக்சன் கிங் அர்ஜூன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் ‘பிரெண்ட்ஷிப்’ படத்திற்காக உருவாக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆந்த்தம் பாடலை சிம்பு வழக்கம்போல் அட்டகாசமாக பாடியுள்ளார். இந்த பாடலை நடிகரும் நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உதய்குமார் இசையில், கெளதம் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை ரஜினி, சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் பால் மற்றும் ஷ்யாம் சூர்யா இயக்கி வரும் ‘பிரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் ஆரம்பித்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
I’m Happy to Release the #SuperStarAnthem which is a tribute to our Thalaivar, Sung by #STR ! From @harbhajan_singh’s #Friendship ????
— Raghava Lawrence (@offl_Lawrence) July 4, 2020
@JPRJOHN1 @shamsuryastepup#Losliya @DmUdhayakumar
#FriendshipFirstSingle
Tamil - https://t.co/z9n1XrILnq
Hindi - https://t.co/ykqkG1SitO