'குறி வச்சா இரை விழனும்': 'தலைவர் 170' படத்தின் மாஸ் டைட்டில்..

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் ’வேட்டையன்’ என்ற டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். மேலும் ஒரு நிமிட டைட்டில் டீசரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த டைட்டில் டீசரில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் அட்டகாசமான காட்சிகள் இருப்பதும், ‘குறி வச்சா இரை விழனும் என்ற ரஜினியின் டயலாக்கும் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வரும் ‘தலைவர் 170’ திரைப்படம் ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது .