உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் ரசித்த சூப்பர் ஸ்டார் நடிகர்!

  • IndiaGlitz, [Monday,December 19 2022]

உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உலக கோப்பை பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் உலக கோப்பையை நேரில் ரசிக்க உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் முதல் பல தொழிலதிபர்கள், விஐபிகள், அரசியல் பிரபலங்கள், பிரான்ஸ் நாட்டு அதிபர் உள்பட பல நாட்டின் தலைவர்கள் கத்தார் நாட்டின் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அதேபோல் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏராளமான திரையுலக பிரபலங்கள் இந்த போட்டியை நேரில் ரசித்தனர்.

உலககோப்பை அறிமுகம் செய்த தீபிகா படுகோன், ஷாருக்கான் உள்ளிட்ட பலர் இந்த போட்டியை நேரில் ரசித்த நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்முட்டி உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேற்று கத்தார் நாட்டில் உள்ள மைதானத்தில் கண்டு ரசித்தார். இந்த போட்டியை அவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

லியோனல் மெஸ்ஸி, இன்று உங்கள் நாள்: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த சூப்பர் புகைப்படங்கள்!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக வெற்றி பெற்றது.

கோவிலில் பிச்சை எடுத்த சிறுவன் திடீரென கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.. எப்படி தெரியுமா?

 உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் வறுமை காரணமாக கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு கோடிக்கணக்கான சொத்து இருப்பதாக தெரிய வந்தது பெரும்

சூடு பிடிக்கும் பிக்பாஸ்.. மீண்டும் ஓப்பன் நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் முடிந்து 71வது நாள் இன்று நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது

கமல்ஹாசன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜெயம் ரவி.. பிரபல இயக்குனரின் ஆச்சரிய தகவல்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த படத்தில் நடிகர் ஜெயம்ரவி உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் இணைந்த 'அவதார்' டெக்னீஷியன்!

 சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் 'அவதார்' படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.