செல்ல மகளுக்குப் பிறந்தநாள்… தடுப்பூசியை இலவசமாகக் கொடுத்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் மகேஷ் பாபு தனது செல்ல மகளின் 9 ஆவது பிறந்த தினத்தை நேற்று ஆக்கப்பூர்வமாக கொண்டாடியுள்ளார். இதற்காக ஆந்திர மாநிலம் சித்தரபூர் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு அவர் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளார்.
நடிகர் மகேஷ் பாபு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகரும் தனது தந்தையுமான நடிகர் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலவசக் கொரோனா தடுப்பூசியை வழங்கி கொண்டாடினார். இதனால் ஆந்திராவின் குண்டூர் பகுதியில் உள்ள புரர்ரிபாலம் எனும் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி கிடைத்தது.
தற்போது தனது செல்ல மகள் சித்தாராவின் 9 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனது மகள் பெயரில் உள்ள சித்தரபூர் கிராம மக்களுக்கு சொந்த செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளார். இதைத்தவிர கொரோனா நேரத்தில் நலிந்த பொதுமக்கள் பலருக்கு இலவச நிவாரணப் பொருட்களையும் மருத்துப் பொருட்களையும் வழங்கி வருகிறார். இவரைப் போலவே அவரது ரசிகர்களும் பொதுமக்களுக்கு உதவுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா நேரத்தில் பிரபலங்கள் பலரும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தங்களது பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபு செய்துவரும் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Covid vaccination drive took place at Siddapur,Telangana yesterday on the occasion of Sitara 's Birthday.We thank Andhra Hospitals and Villagers of Siddapur for making this Initiative taken by SuperStar @urstrulymahesh garu a huge success.??#SiddapurGetsVaccinated pic.twitter.com/LSt7GlkmCY
— Team Mahesh Babu (@MBofficialTeam) July 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments