விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் மகள் ஆடிய சூப்பர் டான்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,June 24 2021]

தளபதி விஜய் பிறந்தநாள் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் இந்த வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே. 

மேலும் நடிகைகள் சிலர் விஜய் நடித்த படங்களில் உள்ள பாடல்களுக்கு நடனமாடி அந்த வீடியோவை விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ், அமிர்தா ஐயர் போன்றோர் ஆடிய நடனம் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சூப்பர் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளார். சேலை காஸ்ட்யூமில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக லட்சுமிமஞ்சு ஆடிய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.