சன்னிலியோன் வாங்கிய அபார்ட்மெண்டில் வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார்: எத்தனை கோடி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் வீடு வாங்கிய அபார்ட்மென்டில் அகில இந்திய சூப்பர் ஸ்டார் மற்றும் பிரபல இயக்குனர் ஒருவரும் வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
மும்பையில் தற்போது பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு டூப்ளக்ஸ். மும்பையின் முக்கிய பகுதியில் இருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சன்னி லியோன் 12வது மாடியில் உள்ள ஒரு வீட்டை வாங்கி உள்ளார். அவர் ரூபாய் 16 கோடிக்கு இந்த வீட்டை வாங்கி உள்ளதாகவும் கடந்த மார்ச் மாதமே பத்திரப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் தற்போது இதே அபார்ட்மென்டில் உள்ள 27 மற்றும் 28 ஆவது மாடியில் உள்ள மொத்த அப்பார்ட்மெண்டையும் அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வாங்கியுள்ளாராம். 5704 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் 6 கார் பார்க்கிங் உள்பட பல வசதிகள் உள்ளது. இந்த வீட்டை அவர் ரூபாய் 31 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது மேலும் இதே அபார்ட்மெண்டில் தனுஷ் நடித்த ’ராஜண்ணா’, ‘அட்ராங்கி ரே’ உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் எல் ராய் அவர்களும் ஒரு வீடு வாங்கி இருப்பதாக தெரிகிறது.
இந்த வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட அனைவரும் புதிய வீட்டுக்கு குடியேறப் போவதாக கூறப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு ரூபாய் 50 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஜூஹூ பகுதியில் உள்ள ஜல்சா என்னும் குடியிருப்பில் தான் தற்போது அமிதாப் பச்சன் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com