கமல் நடிப்பு குறித்து பேச எனக்கு தகுதியில்லை: ‘விக்ரம்’ குறித்து சூப்பர்ஸ்டார் நடிகர்!

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பு குறித்து பேச எனக்கு தகுதியில்லை என தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இந்த படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். மிகச்சிறந்த படைப்பு. விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோரின் நடிப்பு திரையில் ஒளிர்கிறது. இதைவிட யாராலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது.

அனிருத் இசை மிகவும் சூப்பர். உங்களுடைய பெஸ்ட் இசையாக இந்தப் படம் இருக்கும். நீண்டகாலத்துக்கு உங்களுடைய பிளே லிஸ்டிலும் இந்த படத்தின் இசை இடம்பெறும்.

கமல்ஹாசனின் அவர்கள் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு எந்தவித தகுதியும் இல்லை. ஆனாலும் நான் சொல்லக்கூடிய ஒன்று என்னவெனில் உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு இது ஒரு பெருமையான தருணம், வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும் உங்களுடைய குழுவிற்கும்’ என்று பதிவு செய்துள்ளார். நடிகர் மகேஷ்பாபுவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.