சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கேன்சரா? அவரே அளித்த விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு கேன்சர் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தற்போதும் இளம் நடிகர்களுக்கு இணையாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவரது திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிரஞ்சீவிக்கு கேன்சர் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் தான் கேன்சர் சென்டர் திறப்பு விழாவுக்கு சென்றிருந்ததாகவும் அப்போது பேசிய போது ’ரெகுலரா கேன்சர் டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தான் அவ்வாறு கேன்சர் டெஸ்ட் எடுத்துக் கொண்டால் தான் தனக்கு கேன்சர் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
உரிய நேரத்தில் கோலன் ஸ்கோப் டெஸ்ட் என்கிற டெஸ்ட் எடுத்து கொண்டதால் கேன்சரில் இருந்து தான் தப்பித்தேன் என்று தான் பேசியதை தவறாக புரிந்து கொண்ட சிலர் தனக்கு கேன்சர் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments