சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் வின்னர்

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் சூப்பர் சிங்கர் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் படத்தில் பாடவுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு பரிசுகள் மட்டுமின்றி ஒரு பெரிய இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு போட்டியில் வெற்றி பெறும் நபர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பே இந்த போட்டியில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷுக்கு இசையமைப்பாளர் டி.இமான் வாய்ப்பு கொடுத்துவிட்டார். சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீமராஜா' படத்தில் ஒரு கிராமிய பாடலை பாட வாய்ப்பு கொடுத்துள்ளதாக டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.