சூப்பர் சூப்பர் சிங்கர் செந்திலுக்கு கிடைத்த மேலும் ஒரு வாய்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல கிராமிய இசை பாடகர் செந்தில் டைட்டிலை வென்றார் என்பது தெரிந்ததே. மேலும் அவருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டி.இமான் இசையில் 'சீமராஜா' படத்தில் ஒரு பாடலை செந்தில் பாடினார் என்ற செய்தியை பார்த்தோம். தற்போது அவருக்கு மேலும் ஒரு படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை செந்தில் தனது மனைவி ராஜலட்சுமியுடன் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா, பிரபு நடித்து வரும் 'சார்லி சாப்ளின் 2' திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் அமிர்ஷ், செந்தில் மற்றும் ராஜலட்சுமி பல மேடைகளில் பாடி புகழ் பெற்ற 'சின்ன மச்சான்' என்ற பாடலை இந்த படத்தில் இணைக்க முடிவு செய்தார். ஏற்கனவே புகழ்பெற்ற இந்த பாடலை செந்தில், ராஜலட்சுமி ஆகியோர்களையே பாட வைத்துள்ளதாகவும், இந்த பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு பிரபுதேவாவும் நிக்கி கல்ராணியும் நடனம் ஆடுகின்றனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'சார்லி சாப்ளின் 2' திரைப்படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments