ஸ்டார் விஜய்யில் சூப்பர் சிங்கர் சீசன் 10: இனி இசை பிரியர்களுக்கு கொண்டாட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேயர்களின் அபிமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் இசை ரியாலிட்டி ஷோ புத்தம் புதிய சீசன் தொடங்க உள்ளது. இந்த பாடும் திறமைக்கான நிகழ்ச்சி 16 டிசம்பர் 2023 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த நிகழ்ச்சி மக்களிடையே எப்போதும் சிறந்ததாக இருந்து வருகிறது. பல வெற்றிகரமான சீசன் களுக்குப் பிறகு, இந்த பிரம்மாண்ட மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இளம் பாடும் திறமை வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் இந்த மேடையில் பாடும் வாய்ப்பை விஜய் டிவி வழங்கிவருகிறது. போட்டியாளர்களாக பங்கேற்றவர்களுக்கு உரிய அங்கீகாரமும் பிரபல அந்தஸ்தையும் இந்த நிகழ்ச்சி வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியிட்ட சூப்பர் சிங்கர் திறமைகள் திரையுலகில் முன்னணி பின்னணிப் பாடகர்களாகவும், உலகெங்கிலும் உள்ள பல நிகழ்வுகளில் பங்கேற்று நட்சத்திரங்களாகவும் ஜொலிக்கின்றனர்.
முந்தைய சீசன்களின் வெற்றியாளர்கள் முதல் சீசனில், கிருஷ்ணமூர்த்தி முதல் பட்டத்தை வென்றார், அடுத்த சீசன்களில் அல்கா அஜித், ஸ்பூர்த்தி, பிரித்திகா, ஹிருத்திக், கிரிஷாங் மற்றும் ஸ்ரீனிஷா ஆகியோர் ஜூனியர்களுக்கான சமீபத்திய சீசனில் முறையே டைட்டில் வெற்றியாளர்களாக முடிசூட்டப்பட்டனர்.
பிரபல இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா, டி.இமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ரவிச்சந்திரன், ஏ.ஆர். ரகுமான், மற்றும் தமன் ஆகியோரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியை பாடகி சின்மயி, நடிகர் சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷினி, திவ்யா, பாவனா மற்றும் பல பிரபலங்கள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாடகர்கள் மனோ, மால்குடி சுபா, உஷா உதுப் மற்றும் பலர் முந்தைய சீசன்களில் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
சூப்பர் சிங்கர் சீசன் 10 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் திறமைசாலிகள் பங்கேற்று பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சூப்பர் சிங்கர் சீசன் 10ல் புகழ்பெற்ற பின்னணி பாடகர்களான மனோ, சுஜாதா, அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுவர்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ம கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே.
இந்த புதிய சீசனில், நிகழ்ச்சியின் மிக பிரம்மாண்டமான மேடையில், சிறந்த பாடும் திறமையாளர்கள் அனைவரும் ஜொலிக்க உள்ளனர். மேலும் 16 டிசம்பர் 2023 முதல், சனி மற்றும் ஞாயிறுதோறும் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 10 கண்டு மகிழுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments