சூப்பர் சிங்கர் பிரியங்காவின் அப்பா, அம்மாவை பார்த்ததுண்டா? வைரலாகும் ஃபேமிலி போட்டோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இன்று திரையுலகில் பிரபல பாடகர்களாக பலர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் பிரியங்கா என்பதும், பல் டாக்டரான இவர் இசையிலும் மிகவும் திறமையானவர் என்பதும் பலர் அறிந்ததே. குறிப்பாக ‘மெளன ராகம்’ படத்தில் இடம்பெற்ற ’சின்ன சின்ன வண்ணக்குயில்’ என்ற பாடலை ஜானகி மாதிரியே பாடி அனைவரையும் அசத்தி பாராட்டுக்களை பெற்றவர்.
எஸ்பி பாலசுப்ரமணியம் உள்பட ஒருசில பிரபலங்களுடன் மேடையில் பாடியுள்ள பிரியங்கா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா உள்பட ஒருசில இசை அமைப்பாளர்களின் கம்போசிங்கில் உருவாகிய சுமார் 20 திரைப்பட பாடல்களை இவர் பாடியுள்ளார்.
பல் டாக்டர் படிப்பை படித்து கொண்டே இசையிலும் தனது திறமையை வளர்த்து கொண்ட பிரியங்காவுக்கு சொந்தமாக பல் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்பது தான் கனவாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரியங்கா தனது அப்பா அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் சமீபத்தில் யுவன்சங்கர்ராஜா மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்திய போது அதில் பிரியங்காவும் கலந்து கொண்டார் என்பதும் ’தாவணி போட்ட தீபாவளி’ என்ற பாடலை விஜய் ஜேசுதாஸ் உடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோவை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com