மலை, காடுகளில் சுற்றித்திரியும் சூப்பர் சிங்கர் பிரகதி… க்யூட் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் பிரகதி குருபிரசாத். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இசை மீது தீராதப் பற்றுக்கொண்டு தனது சிறு வயதிலேயே பாட்டுப் பாடக் கற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தார். இதன் மூலம் முன்னணி இயக்குநர் பாலா இயக்கிய “தாரை தப்பட்டை” திரைப்படத்தில் ஒரு பாடல் உள்ளிட்ட 16 பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியுள்ளார். அதோடு இந்த “தாரை தப்பட்டை” திரைப்படத்தில் ஒரு கேரக்டரிலும் அவர் நடித்து இருந்தார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் பிரகதி சமீபத்தில் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கடும் ஆச்சர்யப்படுத்தினார். அந்த வகையில் தற்போது வாஷிங்கடன் மாகாணத்தில் உள்ள Talapus Lake எனும் பகுதிக்கு தனது தோழியுடன் சென்றுள்ள அவர் பல இடங்களில் கால்களாலேயே நடந்து சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.
சூப்பர் சிங்கர் மூலம் வெளிச்சம் பெற்ற பிரகதி தற்போது யூடியூப் தளத்திலும் தொடர்ந்து பல ஆல்பங்களிலும் பாடல்களைப் பாடி வருகிறார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments