சூப்பர் சிங்கர் விவகாரம்.. டிஜே பிளாக்கை சரமாரி கேள்வி கேட்ட பூஜா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் பூஜாவுக்கு ரொமான்ஸ் பாடல்கள் அதிகம் போடுவதாக அவரது பெரியம்மா டிஜே பிளாக் மீது குற்றம் சாட்டிய புரோமோ வீடியோ வைரலான நிலையில் ’நான் எல்லோருக்கும் போடுவது போல் தான் பூஜாவுக்கும் போடுகிறேன் என்று டிஜே விளக்கம் அளித்தார், ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா இருக்கு என்று பூஜாவின் பெரியம்மா மன வருத்தமடைந்ததாகவும் அந்த புரோமோ வீடியோவில் இருந்தது.
இதனை அடுத்து உண்மையாகவே டிஜே மீது பூஜாவின் குடும்பத்தினர் வருத்தப்பட்டார்களா? அல்லது இது பிராங்க் வீடியோவாக இருக்குமா? என்றும் நெட்டிசன் மத்தியில் பேசப்பட்டது. விஜய் டிவியில் ஏற்கனவே இது போன்ற பரபரப்பான புரோமோ வீடியோக்களை வெளியிட்டு அதன் பிறகு அதன் பிராங்க் என்று கூறப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
இதில் முதலில் பூஜாவின் பெரியம்மா பிளாக் மீது தனது வருத்தத்தை தெரிவித்தார். 'அவர் ஒரு பெண் பிள்ளை, அவருக்கு இந்த வகையான பாடலை போடுவது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து மேடைக்கு வந்த டிஜே பிளாக், ‘நான் அனைவருக்கும் போடுவது போல் தான் போடுகிறேன், உங்கள் மனதை அது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இனிமேல் அவருக்கு இது மாதிரி பாடல்களை போட மாட்டேன்’ என்று தெரிவித்து உடனடியாக மேடையை விட்டு சென்றார்.
இதனை அடுத்து மேடையில் இருந்த பிரியங்கா, மாகாபா மற்றும் நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் பிரியங்கா டிஜே பிளாக்கை மீண்டும் அழைத்து சமாதானப்படுத்தினார், அப்போது பூஜாவின் பெரியம்மா திடீரென, ‘டிஜே சார் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை, இது பிராங்க்’ என்று கூறிய போது டிஜே பிளாக் உள்பட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதன் பிறகு ’நான் உண்மையாகவே அவர்கள் பேசுவதை பார்த்து பயந்துவிட்டேன் என்று பிளாக் கூற அப்போது பூஜா, ‘அது எப்படி நீங்கள் எனக்கு பாட்டு போட மாட்டேன் என்று சொல்லலாம்? உங்களை நான் பெரிதாக பெரிதும் நம்பி இருந்தேன், என்னை ஏமாற்றி விட்டீர்கள்’ என்று சரமாரியாக கேள்வி எழுப்ப அதனை அடுத்து ’இனிமேல் நான் பாட்டு போடலாமா? என்று டிஜே கேட்க பூஜாவின் பெரியம்மாவோ, ’நீங்கள் பாட்டு போட்டால் தான் இனிமேல் நாங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்போம்’ என்று கூறினார்.
மொத்தத்தில் வழக்கம்போல் விஜய் டிவியின் மற்றொரு பிராங்க் நிகழ்ச்சியாகவே இது முடிந்து உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments