close
Choose your channels

வருங்கால கணவருக்கு லிப்கிஸ் கொடுத்த சூப்பர்சிங்கர் பிரபலம்: வைரல் புகைப்படம்!

Monday, November 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான ஒருவர் தன்னைவிட வயது குறைந்த ஒருவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு லிப்கிஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் ஜூனியர், சீனியர் என தனித்தனியாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 8-வது சீசனை வெற்றிகரமாக முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா சுந்தர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி அதன்பின்னர் திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தனது வருங்கால கணவருக்கு தன்னை விட ஒரு வயது குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவர் விளக்கமளித்தபோது, ‘பெண்ணை விட பையனுக்கு வயது அதிகம் ஆக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை ஒரு பிரச்சினை கிடையாது என்றும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மரியாதையுடன் இருக்க வேண்டும் அவ்வளவு தான்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாளவிகா சுந்தர் தனது வருங்கால கணவருக்கு லிப்கிஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து ‘33 வயதில் சரியான ஒரு நபரை தேர்வு செய்துள்ளேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment