சூப்பர் சிங்கர் ஜூனியரில், மிமிக்ரியில் கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ரா!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பாடி ஆச்சர்யப்படுத்தினார், அவர் பாடலை கேட்டு அசந்து போன நடுவர்கள், அவரை வெகுவாக பாராட்டினார்கள்.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருவதுடன், தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது.
கடந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பாடல்கள் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஹர்ஷினி நேத்ரா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஆவார். விழுப்புரம் நகரை சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது.
ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் திறமையால் அனைவரையும் மயக்கி வருகிறார் ஹர்ஷினி நேத்ரா. கடந்த வார நிகழ்ச்சியில் ‘ராசாத்தி’ பாடல் பாடி அசத்திய அவர் அடுத்ததாக செய்த மிமிக்ரி தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் பாடகி தீ ஆகியோரின் குரலில் அச்சு அசலாக அவர்கள் பாடிய பாடலை அச்சரம் பிசகாமல் பாடி அசத்தி, அனைவரையும் மிரள வைத்தார். நடுவர்கள் அனைவரும் அவரின் திறமையை பார்த்து வியந்து, அவரை வெகுவாக பாராட்டினர். அவர் மிமிக்ரியில் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
திறமையால் ஒளிரும் பலருக்கு ஒரு ஒரு சிறப்பான மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.
#HarshiniNethra immitates Vaikom vijayalakshmi Voice 🤩 Manniley Eeramundu Song
— Vijay Television (@vijaytelevision) August 27, 2023
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... #SuperSingerJunior9 #SSJ9 #SuperSinger #VijayTelevision #VijayTV pic.twitter.com/iy9bBRaMI4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com