சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா பென்னி தயாள்? என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் இந்த நிகழ்ச்சி 7 சீசன்களில் முடிவடைந்து தற்போது 8வது சீசன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாகபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலட்சக்கணக்கில் பரிசுகள் கொடுக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி டைட்டில் வின்னர் பட்டம் வென்றவர் திரையுலகிலும் ஜொலித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் எட்டாவது சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஸ்ரீதர் சேனா என்பவர் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் அற்புதமாக பாடிக்கொண்டிருந்த ஸ்ரீதர்சேனா டைட்டில் பட்டம் வெல்வார் என ரசிகர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது பாடி வரும் ஒரு போட்டியாளரை ஸ்ரீதர்சேனாவுக்கு இணையான ஒருவரை காட்டுங்கள் என நடுவர்களை நோக்கி ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை வைத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயாள் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சமூகவலைதளத்தில் விமர்சனங்கள் அதிகரித்ததை அடுத்து அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக இனி எந்த ஒரு அறிவிப்பும் சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் நானும் மனிதன் தானே, தொடர்ந்து இப்படி மோசமான பதிவு செய்வது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அபிலாஷ், மானசி, முத்துசிற்ப்பி, அய்யனார், அனுஆனந்த், பரத், ஆதித்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments