ஆயில் பூசிய மேனியோடு இணையத்தில் டிரெண்டிங்கான சூப்பர் சிங்கர் பிரகதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பிரபலமானவர் பிரகதி. அமெரிக்காவில் பிறந்துவளர்ந்த இவர் பாடல் பாடுவதில் ஆர்வம்கொண்டு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே நல்ல வரறேப்பையும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு பின்னணி பாடி வருகிறார். மேலும் தற்போது இசை ஆல்பம் தயாரிப்பது மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். பாடலைப் போலவே நடிப்பிலும் ஆர்வம் காட்டிய பிரகதிக்கு இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகிய “பரதேசி“ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூகவலைத் தளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் பிரகதி சுற்றுலா தளங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும், போட்டோஷுட் நடத்தும் புகைப்படங்களையும் தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எண்ணெய் பூசிக்கொண்ட மேனியோடு மேலாடை அணியாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com