தூக்கி வீசப்பட்ட சூப்பர் சிங்கர் பாடகி. ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்து!

  • IndiaGlitz, [Sunday,January 31 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பது தெரிந்ததே. சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என இரண்டு வகை நிகழ்ச்சிகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் இருப்பது தெரிந்ததே

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று தற்போது தனி பாடல்களை பாடி ஆல்பங்களை வெளியிட்டு வருபவர் நித்யஸ்ரீ என்பதும் அவரது ஆல்பத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது

அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு ஆல்பம் குறித்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவரை சில இளைஞர்கள் தூக்கி போடுவது போன்றும், அவர் மேலே இருக்கும் ஒரு கம்பியை பிடிப்பது போலவும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் இளைஞர்கள் அவரை தூக்கி போடும் போது நித்யஸ்ரீ கம்பியை பிடிக்க தவறியதால் கீழே விழுந்தார். இதனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த விபத்து குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ஒரு படப்பிடிப்பிற்கு பின்னால் கலைஞர்களின் எவ்வளவு உழைப்பு இருக்கிறது, உண்மை இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இருப்பினும் கலைஞர்கள் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய அதிகபட்ச உழைப்பினை கொட்டி வருகின்றனர்

ஒரு சிறிய விபத்துக்கே எனக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ஸ்டண்ட் கலைஞர்கள் தினமும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணி புரிகிறார்கள் என்பதை நினைக்கும்போதே பிரமிப்பாக உள்ளது. அவர்களுக்கு என்னுடைய சல்யூட். கலைஞர்களின் வாழ்க்கை ஆடம்பரமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு அவர்களுடைய ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால் ஒரு வலி இருக்கிறது, ஒரு பெரிய பாதிப்பு இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்

ஒவ்வொரு கலைஞரும் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் திரும்பி வந்து அவர்கள் தங்களுடைய இலக்கை அடைவதை மட்டுமே குறிக்கோளாக இருக்கின்றனர். அந்த வகையில் தான் நானும்’ என்று பதிவு செய்துள்ளார். நித்யஸ்ரீயின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

More News

'மாஸ்டர்' படத்தில் 'ஜேடி' வளர்த்த பூனை இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே வாரங்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்து சாதனை செய்தது

நிஷா அகர்வாலின் இன்ஸ்டா பதிவை லைக் செய்த காஜல் அகர்வால் கணவர்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே 

குவாரண்டைனிலும் உடற்பயிற்சி… அசத்தும் இந்திய கேப்டனின் வைரல் வீடியோ!

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது.

கேப்டன் ரஹானேவை திடீரென கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்: காரணம் இதுதான்!

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்தியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தபோது முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு கேப்டன் விராத் கோஹ்லி நாடு திரும்பினார்.

மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் சோம்-ரம்யா: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட சோம் மற்றும் ரம்யா திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது