சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய மானஸி: உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட மானஸி பதிவு செய்துள்ள உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அபிலாஷ், பரத் மற்றும் மானஸி ஆகிய மூவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் மானஸி எலிமினேட் செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். அதேபோல் ஆதித்யா மற்றும் அனு ஆகிய இருவரும் செமிஃபைனலுக்கு முன்னேறி உள்ளனர் என்பதும் முத்துசிற்பி நேரடியாக ஃபைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள மானஸி தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவு செய்துள்ளதாவது: நான் முதலில் என்னுடைய தாய் தந்தை ஆகிய இருவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் சூப்பர் சிங்கரில் என்னால் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். எனது குடும்பம் தற்போது பெரிதாக உள்ளது. எனக்கு நிறைய அண்ணாக்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் வைல்ட் கார்டு மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com