தாமரை செல்வியை எனக்கு 10 வருஷத்துக்கு முன்பே தெரியும்: சூப்பர் சிங்கர் பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வியை எனக்கு 10 வருடங்களுக்கு முன்பே தெரியும் என விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமாகி அதன்பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் செந்தில் என்பதும், செந்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை வென்றார் என்பது தெரிந்ததே. தற்போது செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் ஒரு சில திரைப்படங்களில் பாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வியை தனக்கு 10 வருடங்களுக்கு முன்பே தெரியும் என்று ராஜலட்சுமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சாதாரண நாடக கலைஞராக இருந்த தாமரைச் செல்வியை உலகமே அறியும் வகையில் செய்த பிக்பாஸ் டீமுக்கு தனது நன்றி என்றும், தாமரையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது எனக்கு பெரும் சந்தோஷம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.