பிக்பாஸ் சீசன் 6  நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரபலம்?

பிக் பாஸ் தமிழ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து விரைவில் 6வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் 6 வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது.

இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி, விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்சன் உள்பட ஒருசிலர் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் திரை உலக பிரபலங்கள், கிராமத்து பாடகர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் ஆகியோர்களிடம் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

செந்தில், ராஜலட்சுமி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பதும் இதில் செந்தில் டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து இருவரும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக இருக்கும் நிலையில் ராஜலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.