'மாயோன்' படத்தின் சூப்பர் புரமோஷன்: தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையான முயற்சியாக 'மாயோன்’ படத்தின் புரமோஷன் செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிபிராஜ் நடித்த 'மாயோன்’ திரைப்படம் ஜூன் 16ஆம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிஷோர் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும், இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக புதுமையான முறையில் புரமோஷன் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ரதம் ஒன்று முக்கிய கேரக்டராக வருவதை அடுத்து அதே போன்ற ரதத்தை உருவாக்கி அதை தமிழகம் முழுவதும் வலம் வர திட்டமிட்டுள்ளனர். 26 நாட்கள் இந்த ரதம் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்காக குகை போன்ற இடத்தில் கோவில் ஒன்றை செட் அமைத்து உள்ளதாகவும் இந்த படத்தின் கலை இயக்குனரின் பணி பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ’டாவின்சி கோட்’ ’இந்தியானா ஜோன்ஸ்’ போன்ற மர்ம படமாக இருக்கும் என்றும் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#MaayonRatham visits SRM #Iskcon #Temple ??#Chennai
— Double Meaning Production (@DoubleMProd_) June 6, 2022
Watch #Maayon Trailer ?? https://t.co/Vr8jv896EJ#MaayonTrailer @ManickamMozhi @ilaiyaraaja @Sibi_Sathyaraj @actortanya @ksravikumardir @DirKishore @divomusicindia @proyuvraaj pic.twitter.com/Z92iCYcGwe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments