குழந்தைக்காக எதற்கும் துணிந்த தாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,September 24 2021]

மனித உறவுகளில் தாய்மை உணர்வுதான் எப்போதும் வியந்து கொண்டாடப்படுகிறது. காரணம் அந்த உறவில் மட்டும் சுயநலத்தைக் கொஞ்சமும் பார்க்க முடிவதில்லை. அந்த வகையில் தன் உயிரையும் பொருட்படுத்தாது பெற்றக் குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தாய் பற்றிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நிறைய செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த திட்டு ஒன்றில் ஒரு தாய் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார். அந்தக் குழந்தை நின்று கொண்டிருந்த நிலையில் அங்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்த அந்தத் தாய் உடனடியாகப் பின்னால் திரும்பி செங்கற்களை பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அது வேளைக்கு ஆகாது என்று தெரிந்தவுடன் குழந்தையை காலுக்குக் கீழ் தள்ளிவிட்டு பொத்தென்று விழுந்த அனைத்துச் செங்கற்களையும் தனது முதுகில் சுமந்து கொள்கிறார்.

பின்பு அருகில் இருந்த நபர் ஒருவர் ஓடிவந்து அந்தக் குழந்தையை தூக்கிய நிலையில் அந்த தாயும் தட்டுத்தடுமாறி எழுந்து கொள்கிறார். இந்த விபத்தில் குழந்தை சிறுகாயத்துடன் தப்பித்துக் கொள்கிறது. இந்த வீடியோதான் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

சுஷானந்த நந்தா IFS பகிர்ந்த இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, அந்தத் தாய் யார் என்பது குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் மொழி கடந்து, நாடு கடந்து தற்போது தாய்மை உள்ளம் மட்டும் சோஷியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.